Thursday, February 19, 2015

வினாத்தாளில் கறுப்பு, நீல மை பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்: தேர்வுத்துறை
பரமக்குடி: பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், வினாத்தாளில் கறுப்பு, நீல மை பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மார்ச் 5ல் துவங்குகின்றன. விடைத்தாள்கள் தைக்கும் பணி முடிந்துள்ளது. விடைத்தாள் பயன்படுத்தும் முறை குறித்து, மாணவர்களுக்கு தேர்வுத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
அதன் விவரம்
விடைத்தாளின் முகப்புத்தாளில் மாணவரின் கையெழுத்து மட்டுமே இட வேண்டும். மற்ற எந்த தாள்களிலும் குறியீடு, பெயர், தேர்வு எண் எழுதக் கூடாது.
வினா எண்களை தவறாமல் எழுத வேண்டும். நீலம், கருப்பு மை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கலர் ஸ்கெட்ச், பென்சிலை தவிர்க்க வேண்டும்.
ஒவ்வொரு பக்கத்திலும் 20 முதல் 25 வரிகள் எழுத வேண்டும். வினாத்தாளை சேதப்படுத்துவது, கிழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
தேர்வு குறித்த மனப்பதட்டத்தை தவிர்க்க...
தேர்வு குறித்த மனப்பதட்டம் இரவு துாக்கத்தை கெடுத்துவிடும். எனவே நேர்மறையான நல்ல விஷயங்களை நினைத்துப் பார்த்து உற்சாக மனநிலையுடன் படிக்க துவங்க வேண்டும் என்கிறார் மதுரையைச் சேர்ந்த மனநல டாக்டர் விக்ரம் ராமசுப்ரமணியன்.
மற்றவர்களுடன் தன்னைத் தானே ஒப்பிட்டு பார்த்து பயப்படக்கூடாது. இதுதான் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் என்ற மனஉணர்வு, ஆசிரியர், பெற்றோரின் எதிர்பார்ப்பு... என கலவையான மனநிலையில் மாணவர்கள் இருப்பர். இதுதான் தேர்வு குறித்த மனப்பதட்டத்தை ஏற்படுத்துகிறது.
முதல் மதிப்பெண் பெறும் மாணவர் முதல் சராசரி மாணவர் வரை இந்த மனநிலையை மாற்ற முடியாது. அதை கடந்து வரவேண்டும். நான் நன்றாக படிப்பேனா... நான் நல்ல மதிப்பெண் பெறுவேனா... என்ற எதிர்மறை சிந்தனையை மாற்றுங்கள்.
நான் நன்றாக தேர்வெழுதுவேன். நல்ல மதிப்பெண் பெறுவேன் என்று மனதிற்குள் சொல்லிக் கொள்ளுங்கள். இந்த நேர்மறை சிந்தனை மனப்பதட்டத்தை குறைக்க உதவும்.
ஆழ்ந்த மூச்செடுப்பது இன்னொரு சிறந்த வழி. மூச்சை நன்றாக இழுத்து நிதானமாக வெளியேற்றும்போதும் மனப்பதட்டம் குறையும். கவனம் குவிந்து ஞாபகசக்தி கூடும்.
தேர்வறையில் சகமாணவர்களின் பதட்டத்தை பார்த்து தனக்கு தானே பயம் ஏற்படும். நான் நன்றாக தேர்வெழுதுவேன் என்று மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். பதட்டப்படும் மாணவர்களுக்கும் தைரியம் சொல்லுங்கள்.
பெற்றோர் உதவ வேண்டும்
அதிக மனப்பதட்டத்தில் இருந்தால் இரவு துாக்கம் வராது. எப்போதும் தேர்வை பற்றியே சிந்தனை இருக்கும். யோசிக்காதே என்று சொன்னால் தேர்வை மறந்து விடு என்று சொல்வதற்கு சமமாகிவிடும். இரவு துாக்கம் அவசியம் என்பதால் பெற்றோர் தான் இதற்கு உதவ வேண்டும்.
பாடங்கள், தேர்வு தவிர, பிள்ளைகளை சந்தோஷப்படுத்தும் விஷயங்களை நினைவுபடுத்த வேண்டும். அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை எடுத்துச் சொல்லுங்கள். நகைச்சுவையாக பேசலாம். உற்சாகமான மனநிலையில் துாங்குவதன் மூலம் நன்றாக தேர்வெழுதலாம்.

Saturday, April 12, 2014

பிளஸ் டூ மாணவர்களுக்கு சக்ஸஸ் டிப்ஸ் : ஆங்கிலம்

ஆங்கிலப் பாடத்தைப் பொறுத்தவரை, முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் என்று இரு பிரிவுகள் உள்ளன. முதல் தாளிலும், இரண்டாம் தாளிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் எவை, மதிப்பெண்கள் எளிதில் பெறும் பகுதிகள் எவை, கவனக்குறைவால் மதிப்பெண்களை இழக்கும் பகுதிகள் எவை என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.


ஆங்கிலம் முதல் தாள்:
Synonyms (equates) மற்றும் Opposites-ல் முழு மதிப்பெண்களைப் பெற பாடப் புத்தகத்தில் இருக்கும் ஆறு பாடங்களிலும் உள்ள Glossary  பகுதியை நன்கு பார்க்கவேண்டும்.Singular/Plural-ல் Um  என்பதுஆக மாறுகிறது என்றும், -sis என்பது -ses என்று எப்படி மாறுகிறது என்றும், மேலும் இதைப் போலவே மற்ற எல்லா Plurals-களும் எப்படி மாற்றம் பெறுகின்றன என்றும் அட்டவணை போட்டு வைத்துக்கொண்டு படிக்கவும்.

Singular, Plural, Idioms, expansions, blendings, American English, Compound Words, prefixes 
மற்றும் suffixes மற்றும் clipped words போன்றவைகளுக்கு பதில் எழுதும்போது I like ________, I don’t like ________, I want _______, I don’t want ________ போன்ற ஒரே மாதிரியான முன்பகுதிகளை பயன்படுத்தியோ (eg. I want gasoline) சொந்தமாகவோ பதில் எழுதலாம். Syllable-களுக்கு textbook 176-ம் பக்கத்தில் உள்ள வார்த்தைகளை சரியாகப் பிரித்து, திரும்பத்திரும்ப சொல்லிப் பார்த்தாலே போதும்.

Modals, Semi modals-
களை பொருத்தவரை கேள்வியில் like வந்தால் விடை would, lest வந்தால் should, ______ not என்று வந்தால் need, How ______ என்று வந்தால் dare என்றshortcut முறையிலும், நன்கு புரிந்தும், textbook-ல் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் பதில் தெரிந்து வைத்தாலே போதும். Tense - பொருத்தவரை every என்று வந்தால், கொடுக்கப்பட்ட வார்த்தையை அப்படியே அல்லது `s’ or ‘es’ சேர்த்து Answer எழுதவேண்டும்.Since, for வந்தால் has/have + been + Ving என்ற அமைப்பில் பதில் எழுதவேண்டும்.              
 
Relative Pronoun-
ல் மனிதன் ______ verb என்றால் நடுவில் who, மனிதன் _____ மனிதன் என்றால் whom,  மனிதன் _____ மனிதன்  or பொருள் என்றால் whose, பொருட்கள், எண்ணங்கள் போன்றவைகள் dash- அடுத்துவந்தால் Which or that என்று புரிந்து எழுத கற்றுக் கொள்ளவேண்டும். Phrase/Preposition- பொருத்தவரை இதுவரையில் because of, Inspite of, In case of, through, with போன்றவைகள் பதிலாக வருவதுபோல் தான் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. By, with (or) through உடன் மனிதன் (or) பொருள் வந்தால் அந்த வாக்கியம்Personal Passive Voice-ல் உள்ளது என்று பொருள். Reporting the dialogue-ல் III personsவருவது, Past Tense-ல் அமைப்பது மற்றும் ஒரே Paragraph ஆக பதில் எழுதுவதை கவனத்தில் கொள்ளவேண்டும். Simple, Complex, Compound பொருத்தவரை Textbook-ல் 294-298 ஆம் பக்கம் வரை உள்ள கேள்விகள் தான் மிக அதிகமான அளவில் கேட்கப்பட்டுள்ளது. அவைகளைப் பார்த்தாலே போதும்.

Prose para  
எழுதும்போது ஒன்று அல்லது இரண்டு பக்கங்களில் பதில் எழுதவேண்டும். ஒரே Paraவாக இருக்கவேண்டும். Side headings போடக்கூடாது. ஆரம்பத்தில், நடுவில், முடிவில்Prose Lines or Proverbs கொடுக்கவேண்டும். Important Points-களை highlight  செய்து காட்டவேண்டும். Prose Essay  எழுதும்போது அதிகபட்சம் 4 அல்லது 5 பக்க அளவில் எழுதலாம். Introduction, Synopsis, Headings, Prose lines or Quotations, Conclusion என்ற அமைப்பில் Essay  எழுதவேண்டும். முக்கியமான வரிகளை highlight செய்துகாட்ட வேண்டும். சிறிய அளவில் அழகான படங்களை பாடக்கருத்துக்கு ஏற்றவாறு வரையலாம்.ERC-ல் முழுமதிப்பெண் பெற ஒவ்வொரு Poem-த்திலும் ஒவ்வொரு வரியிலும் உள்ள ஒரு முக்கியமான அதாவது Keyword (or) rhyming word தெரிந்தாலே போதும். ERC-ல் context மற்றும் explanation எழுதினால் போதும். Comments என்ற பகுதிக்கு தனியாக மதிப்பெண் கிடையாது. Poetry appreciation Questions-களுக்கு முழுமையாக பதில் எழுதுவதற்கு முன்பாக பாடல்களின் பொருள் தமிழில் அல்லது English-ல் நன்கு புரிந்துவைத்துக் கொள்ளவேண்டும். 55 - 60 வரை உள்ள கேள்விகளில் சில நேரங்களில் பதில் அங்கே உள்ள வரிகளிலேயே காணப்படும். அதற்கு முழு வரியையும் copy செய்யக்கூடாது. புரிந்து வார்த்தைகளை மட்டும் தனியே எடுத்து எழுதவேண்டும்.“English Words”-லிருந்துappreciation question வந்தால் பெரும்பாலும் English Words என்பதுதான் பதிலாக அமைகிறது.

இறுதியில் Poetry Paragraph  எழுதும்போது ஒன்று அல்லது இரண்டு பக்க அளவில் தவறில்லாமல், முக்கியமான Points-களை highlight செய்து Poetry Lines-களை ஆங்காங்கே சேர்த்து தெளிவாக எழுதினாலே 5-க்கு 5 மதிப்பெண்களை அள்ளிவிடலாம்.

மாணவர்கள் கவனத்திற்கு:
அதிகமான பகுதியை ஒவ்வொரு பக்கமும் விரயம் செய்யவேண்டாம். ஒரு பக்கத்திற்கு 20 வரிகள் இருக்கவேண்டும். Textbook-ல் உள்ள இலக்கண கேள்விகளுக்கான பதிலை சுருக்கமான மற்றும் தெளிவான வழியில் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். Fill in the blanks-ல் உள்ள கேள்விகளுக்கு கேள்வியுடன் கூடிய பதிலை எழுதவேண்டும். மற்ற கேள்விகளுக்கு, கேள்வியில் உள்ள வார்த்தைகளை தலைப்பாக்கி பதில் எழுதவேண்டும். 1 முதல் 69 வரையுள்ள கேள்வி எண்களை சரியாக இடவேண்டும். Essays, Paragraphsபோன்றவற்றிற்கு குறைந்தது முதல் இரண்டு பாடங்கள் / பாடல்களை தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.

முழுமதிப்பெண்முந்தைய ஆண்டுகளின் கேள்வி பதில்கள் + பாடநூலில் உள்ள குறு வினாக்கள்என்பதை மனதில் கொண்டால் ஆங்கிலம் நமக்கு அத்துப்படி ஆகிவிடும்.

ஆங்கிலம் இரண்டாம் தாள்:
ஆங்கிலம் இரண்டாம் தாளுக்கு, பிளஸ் டூ வகுப்பில்  மொத்தம் ஏழு கதைகள் உள்ளன. அவற்றிற்கான தமிழாக்கத்தை வரிக்கு வரி நன்கு தெரிந்து கொண்டாலே முதல் 15 மதிப்பெண்களை அப்படியே எடுத்துவிடலாம். அடுத்து story-யை Essay-வாக எழுதும்போதுIntroduction, Synopsis, Headings, Quotations, Proverbs, Morals  மற்றும் சில சமயங்களில் கதைக்கேற்றவாறு அழகான படங்கள் இடம்பெற செய்யவேண்டும். Essay 4 to 5 பக்கங்கள் வரை இருந்தால் சிறப்பாக அமையும். Study Skills-ல் dictionary மற்றும் Thesaurusபோன்றவற்றிலிருந்து ஒரு கேள்வியும் library sections, OPAC  ஆகியவற்றிலிருந்து ஒரு கேள்வியும், Reporting, Summarizing, Essay Writing, Note making, Note taking, e-mail, internet போன்றவற்றிலிருந்து ஒன்று அல்லது இரண்டு கேள்விகளும் Euphemism, Eponymous  words, chiche  மற்றும் arranging the authors போன்றவற்றிலிருந்து ஒன்று அல்லது இரண்டு கேள்விகளும் கேட்கப்படுகிறது.

அடுத்து Error correction-ல் rules தெரிந்தாலே பதில் கிடைத்துவிடும். ‘Either of the boys’ என்று வாக்கியம் ஆரம்பித்தால் are-க்கு பதிலாக is என்ற singular verb வரவேண்டும். `As’ என்றுsentence ஆரம்பித்தால் நடுவில் `so (or) and so’ வராது போன்ற வரையறை நம் கைவசம் மனதில் இருக்கவேண்டும். இந்தக் கேள்விக்கு வெறும் ஒரு வார்த்தையை பதிலாக எழுதாமல் ஒரு முழு வரியையே பதிலாக அமைக்க வேண்டும். Summarising  என்ற பகுதியில் அரை பக்கத்திற்கு Rough Draft- எழுதுதல், Title, Rough Draft- அடித்துவிடுதல், கால் பக்கத்திற்கு Fair Draft- எழுதுதல், title, number of words in the original paragraph, umber of words in Fair Draft  என்ற பகுதிகள் காணப்படவேண்டும். ஒரு பக்கத்திற்கு மேல் போகக்கூடாது.

Responding to the advertisement  letter 
எழுதும்போது 3-4 பக்க அளவிற்கு பதில் இருத்தல் நல்லது. From, To, Date, Salutation, body, subscription, Bio-data / Curriculum vitae including 10th, Plus 2, degree level study years, boards, universities, ranks, achievements, career level achievements, declaration paragraph… etc. என்ற அமைப்பில் letter இருக்கவேண்டும். Non lexical fillers-ல் er, hmm, uh, ah, mm போன்றவைகள் வருவது போல மட்டுமே இதுவரை கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றின் பயன்பாடுகளை பார்த்தாலே போதும். இதில் 2 / 2 எடுத்துவிடலாம்.

Road Map-
ல் மூன்றே வரிகளில் அல்லது Steps-களில் பதில் எழுதவேண்டும். முதல் இரண்டுsteps-களும் கட்டளை வாக்கியங்களாக இருக்கவேண்டும். மூன்றாவது step, You என்று ஆரம்பித்து சாதாரண வாக்கியமாக காட்சியளிக்கலாம். Opposite  என்ற வார்த்தையை இதில் பயன்படுத்தும்போது to என்ற வார்த்தை அதனையடுத்து வராது. (Correct: - Then you can reach the temple opposite the Church). வினாத்தாளின் இறுதியில் இடம்பெறும் matching-ல் Proverbs-களுக்கும், products-களுக்கும் Clue வார்த்தைகளை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். (Eg: Even Homer nods -> No man is Perfect).

General Essays- Ambition or Profession, Science, Rain Water Harvesting, Deforestation, Computers, Role of Women, Pollution, Hobby, Television  
போன்றவைகள்தான் திரும்பத் திரும்ப கேட்கப்படுகிறது. இவற்றை எழுதும்போது Introduction, Synopsis, Headings, Quotations, Proverbs, Morals, Conclusion  போன்ற அமைப்புகள் இடம்பெறும் வகையில் பதில் எழுதவேண்டும். General Essay- பொருத்தவரை குறைந்தபட்சம் 2 பக்கங்கள் முதல் அதிகபட்சம் நான்கைந்து பக்கங்கள் வரை எழுதலாம். பொருத்தமான படங்களுடன், கூடுதல் பக்கங்களில் எழுதப்படும் கட்டுரைக்கு முழுமையான மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஆகவே +2 ஆங்கிலத் தேர்வை எதிர்நோக்கி இருக்கும் மாணவர்களே, முந்தைய தேர்வுகளில் கேள்விகள் கேட்கப்பட்ட விதம், எந்தப் பகுதியை நாம் இன்னும் விட்டுள்ளோம் என்ற தேடல், தொடர்ந்து நமக்கு நாமே சொல்லிப்பார்த்தல், எழுதிப்பார்த்தல், நாம் சக மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்தல், தெளிவான வகையில் presentation, கேள்வி எண்களை சரியாகக் குறிப்பிடுதல், முக்கியமான points-களை highlight செய்து காண்பித்தல், மற்றும் இதற்குமேல்தேர்வுஎன்ற எண்ணம் நம்மை பயமுறுத்தாமல் இருத்தல் ஆகியவைகளே நம்மை ஆங்கிலத்தில் 200-க்கு 200 மதிப்பெண்களை வாங்கத் தூண்டும்.